லலித், குகன் காணாமல் போனமை தொடர்பில் CID விசாரணை

79
0
Spread the love

 

யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான விசாரணைகள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்றைய நாடாளுமன்ற (08.07) அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க முன்வைத்த வாய்மொழி மூல வினாக்களுக்குப் பதிலளிக்கையில்,
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சர் ஆனந்த விஜயபால இதனைத் தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலைகள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் விசேட பிரிவினரால், இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here