வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக்க நாணாயக்காரவின் வீட்டை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெலிகம – மாலிம்பட பகுதியிலுள்ள அவரது வீட்டை இலக்குவைத்து இன்று(16.07) அதிகாலை நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வருகைதந்தவர்களினால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 03 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.







