சித்தி விநாயகர் இந்து கல்லூரியின் வரலாற்றில் சாதனை நாயகனாக இடம் பிடித்துள்ளார் S.சுஜந்தன்
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட்
சங்கத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் 17 வயதிற்குட்பட்ட போட்டித் தொடர் கடந்த (17.07) வியாழக்கிழமை
மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மற்றும்
யாழ்பாணம் மானிப்பாய் இந்து கல்லூரி அணிகளுக்கிடையே நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சித்தி விநாயகர் இந்துக்கல்லூரி அணி 50 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 329 ஓட்டங்களை பெற்றது.
குறித்த போட்டியில் சுஜந்தன் ஆட்டம் இழப்பின்றி 137 ஓட்டங்களை பெற்றிருந்ததன் மூலம் தனது 3வது சதத்தினைப் பூர்த்தி செய்து,பாடசாலை வரலாற்றில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
அத்துடன் அவர் பெற்ற சதமானது பாடசாலையின் பத்தாவது சதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவர் இதற்கு முதல் நடைபெற்ற போட்டிகளில் ஹார்ட்லி கல்லூரிக்கு எதிராக 105 ஓட்டங்களையும்
கடந்த ஆண்டு சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.









