வத்தளையில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

60
0
Spread the love

 

வத்தளை – ஹேகித்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹேகித்த பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றிலிருந்த நபரை முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நால்வர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

சம்பவத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இவர் உதவி புரிந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here