கேகாலை, கலிகமுவ பகுதியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பஸ்ஸொன்றும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கேகாலை மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்







