சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 10,000 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்
கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று (21) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.







