செம்மணியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்

53
0
Spread the love

செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து நேற்றைய தினம் (22.07) மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையின் 02 ஆம் கட்டத்தின் 17ஆவது நாள் அகழ் நேற்று இடம்பெற்றது.

இதன்போது மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.

எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகளே அடையாளம் காணப்படுள்ளன

குழந்தைகள் அருந்தும் பால் போத்தல் என சந்தேகிக்கப்படும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
இவற்றில் 65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here