யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் 02 ஆம் கட்ட அகழ்வு பணிகள் 20 ஆவது நாளாக இன்றும் (25.07) முன்னெடுக்கப்படவுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதவா குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தடயவியல் பொலிஸார், குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தினர், தொல்லியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சஜிதரன் ஆகியோரின் பங்கேற்புடன் அகழ்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே ஆழ்ந்தெடுக்கப்பட்ட 67 மனித எலும்பு கூடுகளுடன் புதன்கிழமை (23.07) பிற்பகலில் இருந்து நேற்று வரை 9 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
இதற்கமைய மொத்தமாக 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கிறன என்றும் நேற்றைய தினம் (24.07) புதிதாக மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. என்றும் அவர் கூறினார்.
இதற்கமைய இதுவரை 88 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
சிறு போத்தலொன்றும் இரும்புகள் என்று நம்பப்படுகின்ற பல கட்டிகளும் எடுக்கப்பட்டிருந்நததாக சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் மேலும் தெரிவித்தார்.







