பொதுமக்களிடமிருந்து பாரியளவான நிதி மோசடி சுமார் எட்டு ஆண்டுகளாக இலங்கை அதிகாரிகளிடம் இருந்து தப்பிய நைஜீரிய நாட்டவர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (24.07) கைது செய்யப்பட்டார்.
பெறுமதியான பரிசுப் பொதிகள் இருப்பதாகவும் அவற்றை விடுவிக்கப் பணம் தேவை என்றும் கூறி, மக்களிடம் சுமார் 15 இலட்சம் ரூபாயைப் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிபதி தனுஜா லக்மாலி ஜெயதுங்கவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், சந்தேகநபர் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தற்போது விசாரிக்கப்படும் பல வழக்குகளில் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேகநபரை ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.







