தலைமன்னாரில் அமைக்கப்பட்டுள்ள மலையக மக்களின் 200 வருட நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு(video)

64
0
Spread the love

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருட பூர்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கம் மலையக மக்கள் வருகை தந்து நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினமும் அவ்வாறான ஒரு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூக கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து சிங்கள தமிழ் ,முஸ்லிம் மக்கள் இணைந்து கொண்டு நினைவேந்தலை முன்னெடுத்தனர். குறித்த நினைவேந்தல் நிகழ்விற்கு பின் மன்னாரில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஏற்பாட்டு குழுவினர், மூன்றாவது முறையாக இந்த வருடமும் தாங்கள் முன்னெடுக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்விற்கு மன்னாரில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் பாரிய அளவிலான ஆதரவு வழங்கியுள்ளதாகவும் இவ்வாறான ஒரு சமூகத்துடன் கூட்டிணைந்து எவ்வாறு செயற்படலாம் எனவும் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற நில ஆக்கிரமிப்புகள் தொடர்பில் அப்பகுதி மக்களுடன் இணைந்து அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுத்து இந்த பிரச்சினைகளை தீர்க்கலாம் என்பது தொடர்பில் இன்றைய தினம் ஒரு கலந்துரையாடல் நடாத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.