வெப்பமான வானிலை குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

58
0
Spread the love

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதன் விளைவாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படகூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலைமைகளைத் தடுக்க அதிக நீர் அருந்துவதும், இயற்கையான நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்வதும் அவசியம் என விசேட வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை “ எச்சரிக்கை மட்டத்தில் தொடரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here