புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலொன்றில் கைவிடப்பட்ட நிலையில், பல நாட்கள் பழமையானதாக நம்பப்படும் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ரயிலின் கழிவறையைச் சுத்தம் செய்யும் போது துப்பரவு பணியாளர் ஒருவர் குறித்த சிசுவின் சடலத்தை கண்டுள்ளார்.
இதன்போது துப்பரவு பணியாளர் தெமட்டகொட பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட பொலிஸார், கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திஸாநாயக்கவிடம் உண்மைகளை முன்வைத்தனர்.
பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சிசுவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்







