செம்மணி மனித புதைகுழியை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்

101
0
Spread the love

 

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி பகுதியை நாளை மறுதினம் (04.08) பார்வையிடுவதற்கு இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அந்த குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய பணிப்பாளர் ரி.கனகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண
பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இந்த பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தமது தரப்பினர், செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும்
கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்
கலந்துரையாடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய பணிப்பாளர் ரி.கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here