எரிபொருள் விலை விரைவில் குறைக்கப்படும்

85
0
Spread the love

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், உலகச் சந்தையில் நிலவும் எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டிலும் எரிபொருள் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.

அவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டாலும், அதன் முழுமையான சுமையை மக்கள் மீது சுமத்தாமல், கணிசமான பகுதியை திறைசேரி பொறுப்பேற்கும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். மேலும், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைகளை, போர்ச் சூழல் தணிந்தவுடன் கூடிய விரைவில் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here