முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட 03 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் காஞ்சன சில்வா இன்று(04.08) உத்தரவிட்டார்.
மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை பரிசீலிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 21ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியை போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.







