பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டள்ளனர்.
நவகமுவ பகுதியில் இருவரும் கைது செய்யபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர், பெல்லன்வில பகுதியில் உள்ள உணவகமொன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது காயமடைந்த உணவக உரிமையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் துப்பாகி பிரயோகம் மேற்கொண்ட நபரும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்பதுடன் மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்தவர் ‘கொஸ் மல்லி’ எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் என்றும்
அவரது எதிர்த்தரப்பினரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.







