கொள்கலன் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி

121
0
Spread the love

 

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்றுவதற்கு முயற்சிக்கும்போது, அந்த கொள்கலன் மற்றொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது வீழ்ந்துள்ளது.

இதன்போது சாரதி பலத்த காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தெடிகமவைச் சேர்ந்த 36 வயதுடைய சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொள்கலனை இயக்கிய இயந்திர இயக்குநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here