புதிய பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதியளித்துள்ளது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று (12.08) பிற்பகல் கூடியது.
இதன்போது புதிய பொலிஸ்மா அதிபரை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ்மா அதிபரான பிரியந்த வீரசூரியவின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்தார்.







