சாந்த முதுன்கொடுவ கொலை சம்பவம் தொடர்பில் வெளியான பல தகவல்கள்

52
0
Spread the love

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக 3 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மீகொட பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ நேற்று (13.08) உயிரிழந்துள்ளார்.

எடிகல பகுதியில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நேற்று பகல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

காரில் வருகை தந்த சிலரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது காயமடைந்;த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில், சாந்த முதுங்கொடுவவின் மரணத்திற்குத் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திலிருந்து நுரையீரலுக்குள் இரத்தம் நுழைந்ததே காரணம் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காகப்  பொலிஸார் வீதித் தடைகளைப் பயன்படுத்தி வாகனச் சோதனையிட்டனர்.

மேலும் தலங்கமவில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற வாகமொன்றைச்  சோதனை செய்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வருகை தந்த வாகனம் என்பது தெரியவந்தது.

அதன்படி, தலங்கம பொலிஸார் 30 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிலம் கையகப்படுத்துதல், விற்பனை மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்னதாக மீகொடை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று நிலத்தகராறு தொடர்பில் ஏற்பட்ட மோதல் குறித்து முறைப்பாடளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here