புதிய பொலிஸ்மா அதிபருக்கு நியமன கடிதம் வழங்கி வைப்பு

66
0
Spread the love

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13.08) பிற்பகல் அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61E(b) பிரிவின்படி இந்தப் புதிய நியமனத்திற்கு அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட்டது.

இதன்படி, இலங்கையில் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here