பேலியகொடை – குணரத்ன மாவத்தையில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பலம் இன்று (19.08) காலை இடம்பெற்றுள்ளது.
பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்







