Clean Sri Lanka திட்டத்திற்கமைய, மன்னார் மடு தேவாலயத்தில் 542 வது காலாட்படைப் பிரிவின் சுத்திகரிப்பு பணி

200
0
Spread the love

அரசாங்கத்தின் Clean Sri Lanka திட்டத்தின் கீழ்  542 ஆவது காலாட்படைப் பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலில், 542 ஆவது காலாட்படைப் படைப்பிரிவு, மடு மாதா தேசிய புனிதத்தலத்தை சுத்தம் செய்யும் பணியை இன்று (19.08) செவ்வாய்க்கிழமை  முன்னெடுத்துள்ளது.

​மடு தேவாலயம் இலங்கையில் உள்ள மிகவும் புனிதமான கத்தோலிக்க புனித தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும் எண்ணற்ற சிங்கள மற்றும் தமிழ் பக்தர்கள்  ஆண்டு முழுவதும் இங்கு வருகை தருகின்றனர்.

இந்த ஆண்டு மடு திருவிழா ஒகஸ்ட் 06, 2025 அன்று ஆரம்பமாகி ஆகஸ்ட் 15, 2025 அன்று முடிவடைந்தது.

இந்த காலகட்டத்தில், மொத்தம் 338,642 பக்தர்கள் தேவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் பக்தர்களுக்கு தேவாலய வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்குவதற்கு இடமளிக்கப்பட்டது.

இதன் விளைவாக, பெரிய அளவில் பக்தர்கள் கூடியதால், உடனடி மற்றும் விரிவான துப்புரவுப் பணி தேவைப்பட்டிருந்த நிலையில்

542வது காலாட்படைப் பிரிவு கூட்டுத் துப்புரவுப் பணியை ஏற்பாடு செய்திருந்தது.

​இந்த சுத்திகரிப்புப் பணிக்கு மாந்தை மேற்கு  பிரதேச சபை,   மடு தேவாலய ஊழியர்கள், பொதுமக்கள் ஆதரவளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here