மன்னாரில் 17 ஆவது நாளாகவும் போராட்டம்

184
0
Spread the love

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களுக்கு எதிரான போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (19.08) 17 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.

பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்று ஆதரவு வழங்கும் வகையில் பனங்கட்டிக்கொட்டு, ஜிம் பிரவுன் நகர், எமில் நகர், இத்திக்கண்டல், தலைமன்னார் கிராமம் ஆகிய கிராம மக்களும், மீனவர்களும் கலந்து கொண்டனர்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த திட்டங்களை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here