இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க ஏப்ரல் 30 முதல் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா மீண்டும் பாகிஸ்தான் விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது.
அதேபோன்று, பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது.







