செம்மணியில் இன்று மேலும் ஆறு எலும்புக்கூடுகள் மீட்பு

157
0
Spread the love

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 08 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (28.08)வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை 36 ஆவது நாளாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 44 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதியுடன் 164 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுவரையில் 177 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here