யாழில் குடியகழ்வு மற்றும் குடிவரவுத் திணைக்களம் நாளைய தினம் திறந்து வைக்கிறார் ஜனாதிபதி

123
0
Spread the love

யாழ் மாவட்டச் செயலக வளாகத்தில், குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்கள அலுவலகத்தினை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாளைய தினம் திறந்து வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்க,ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க நாளைய தினம் (011.09) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதற்கு அமைவாக, ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து, யாழ் மாவட்டச் செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, யாழ்.பொது நூலகத்தில் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி,

பகல் 1.30மணியளவில், மண்டைதீவுப் பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதேவேளை நாளை மறுதினம் (02.09) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here