இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (31.08) நடைபெறவுள்ளது.
ஹராரே விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 01 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி, இந்த ஒருநாள் தொடரில் தற்போது இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருபதுக்கு 20 தொடர் செப்டம்பர் 3, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது
இந்த மூன்று போட்டிகளும் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







