மன்னார் நகர பிரதேச செயலாளராக கா.காந்தீபன் அவர்கள் நேற்று (01.09) திங்கட் கிழமை காலை 9.00 மணியளவில் தனது கடமைகளை மன்னார் மாவட்ட செயலாளர் முன்னிலையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இவர் 2012 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவாகி 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள உதவி பணிப்பாளராகவும் 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை முல்லைத்தீவு உதவி தேர்தல்கள் ஆணையாளராகவும்
கடமையாற்றினார்.
மேலும் 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் அண்டு வரை பதுளையில் உதவி தேர்தல்கள் ஆணையாளராகவும் இவர் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.









