திருகோணமலையில் மாபெரும் கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று (05.09) இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அனைத்து கட்சிகளின் சார்பில் யாழ் செம்மணியிலும் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு நீதிகோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு பெருமளவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், முதியொர், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கட்சி அங்கத்தவர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டு கிருஷாந்தி குமாரசாமி போன்ற மாணவிக்காகவும் அவரைப்போல் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்காகவும் நீதிகோரி தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.







