அதிரடியாக குறைக்கப்பட்ட உணவுகளின் விலை

158
0
Spread the love

ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்தார்.

இந்த விலை குறைப்பு இன்று (05.09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக் குறைப்பை வாடிக்கையாளர்களிடம் உரிய முறையில் செயற்படுத்துமாறு அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை
உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான், உணவக உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here