இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (10.09) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இன்று வரை தங்களுக்காக மரணித்த ஒருவரை கடவுள் என நாடாளுமன்றத்தில் கூறிய ஒரே தமிழ் அரசியல்வாதி தான் மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அரசாங்கம் கைது செய்த போதிலும் வடக்கு கிழக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
வடக்கு மக்கள் கடவுச்சீட்டு அலுவலகமோ கிரிக்கட் மைதானமோ கேட்கவில்லையென்றும் மாறாக தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வையே கேட்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் ஆதங்கம் வெளியிட்டார்.







