இலங்கையில் வணிக ரீதியாகவும், ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பயிரிடப்படும் மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகிய பயிர்செய்கைகளுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
விவசாய அமைச்சு, இந்த காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இயற்கை பேரழிவுகள், நோய் தாக்கங்கள், பூச்சி சேதம் மற்றும் காட்டு யானை தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, இந்த காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்படி, இஞ்சிக்காக ஏக்கருக்கு 02 இலட்சம் ரூபா வரையும், மஞ்சள் பயிர்ச்செய்கைக்காக ஏக்கருக்கு அதிகபட்சமாக 07 இலட்சம் ரூபா வரையும் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
காட்டு யானைகளினால், அதிக ஆபத்துள்ள பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், அனுராதபுரம் மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களின் விவசாயிகளுக்கே இந்த சலுகை காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.







