EPF சிக்கல்களை தீர்க்க நடமாடும் சேவை

170
0
Spread the love

தீர்க்கப்படாத ஊழியர் சேமலாப நிதிய மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடமாடும் சேவை வாரமொன்று செப்டம்பர் மாதம் 22ம் திகதி முதல் 26ம் திகதி வரை அனைத்து மாவட்ட மற்றும் தொழிலாளர் அலுவலகங்களில் முன்னெடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர் கணக்கு விபரங்கள், நிலுவை, பிழைகள் காணப்படும் உறுப்பினர் கணக்கு விபரங்களை தேசிய அடையாள அட்டை தகவலுக்கமைய சீர் செய்தல், உறுப்பினர்களை பதிவு செய்தல், முறைப்பாடுகளை பதிவு செய்தல், தொழிலாளர் சட்டங்கள் தொடர்பில் ஆலோசனைகளைப் பெறுதல் போன்ற பிரச்சினைகளுக்கு இதன்போது தீர்வு வழங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here