வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்றைய தினம் (19.09) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்று வவுனியா கனகரயான்குளம் பகுதியில் வைத்து அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலியானவர் ஜேர்மன் நாட்டில் இருந்து வருகைதந்து கனகயாரன்குளம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்த கனகராயன்குளம் பொலிசார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்







