மன்னார் காற்றாலை திட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

264
0
Spread the love

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னாரில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (19.09) முன்னெடுக்கப்பட்டது.

“நமது நாடு, நமது மன்னார், நமது போராட்டத்தின் கோரிக்கைகள்” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும் என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு இடத்திலும் கனிம மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது,  உயர் மின் உற்பத்தி திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் போன்ற கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here