இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

233
0
Spread the love

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன் 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்
உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

அதே ஆண்டில், 375 பெண்கள் இவ்வாறு இணையவழி ஊடாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்ட 114 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ்
அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here