'வளமான நாடும் அழகான வாழ்க்கையும்' எனும் தொனிப்பொருளில் 'மறுமலர்ச்சி நகரம்' உள்ளூராட்சி வார இறுதி நிகழ்வு நேற்றைய தினம் (24.09) புதன்கிழமை மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,சர்வ மத தலைவர்கள் கலந்து கொண்டதுடன் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர பிரதேச செயலாளர் கா.காந்தீபன் மற்றும் மன்னார் பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ம.சாந்தசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மன்னார் நகர சபை உறுப்பினர்கள்,பணியாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்கள பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது ,மன்னார் நகர சபையினால்,முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன .
அத்தோடு உள்ளூராட்சி வாரத்தில் இணைந்து செயற்பட்டமைக்காக மன்னார் நகர சபைக்கு உட்பட்ட சனசமூக நிலையங்களின் அங்கத்தவர்களும் இதன் போது,பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.








