கேபிள் கார் அறுந்து வீழ்ந்ததில் 07 பௌத்த துறவிகள் பலி

203
0
Spread the love

குருநாகலை – மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மதகுருமார்களை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 07 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு ரஷ்ய துறவிகளும், கம்போடிய துறவி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த 06 பேர் குருநாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் 13 மதகுருமார்கள் பயணித்துள்ளனர்.

நா உயன ஆரண்ய சேனாசனத்தில் ஏற்பட்ட விபத்தில் மறைந்த அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பௌத்த பிக்குகளுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பௌத்த பிக்குகள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த உலகத்தின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர வனத்தில் வளர்ந்த பௌத்த பிக்குகள், புத்தர் போதித்த நிலையற்ற தன்மையை விளக்கி நம்மை விட்டு பிரிந்து சென்றதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here