பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் பஸ் மற்றும் வேன்களை சோதனைக்குட்படுத்த இன்று (26.09) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
சிறுவர் தின தேசிய வாரத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் பஸ்கள் மற்றும் வேன்களினூடாக சிறந்த சேவை வழங்கப்படுவதை நோக்காகக் கொண்டு இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதியமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.







