யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன விளையாட்டு நிகழ்வின் உதைபந்தாட்ட இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன உதைபந்தாட்ட அணியினருக்கான உதைபந்தாட்ட சீருடை வழங்கப்பட்டது.
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான வேலாயுதம்பிள்ளை சசிக்காந் மற்றும் கிருஷ்ணகோபால் கணைச்செல்வன் ஆகியோர் வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் வி ஜெ நிதர்சனிடம் இன்றையதினம்(03.10) சீருடையை வழங்கினர்.

யாழ்ப்பாண செய்தியாளர்
பூ.லின்ரன்







