யாழில் சட்டவிரோதமாக சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக நடவடிக்கை

164
0
Spread the love

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, குறித்த எட்டுப் பேருக்கும் எதிரான விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த எட்டுப்பேரில் மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும், ஐவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவருக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சொத்துச் சேர்ந்த குற்றச்சாட்டும், ஏழு பேருக்கு எதிராக வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்ந்த குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.

வன்முறைகளில் ஈடுபட்டு சொத்துச் சேர்த்தவர்கள், வன்முறைகளை ஒழுங்கமைத்தவர்களுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் விசேட புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here