கரூர் சம்பவம் – தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

184
0
Spread the love

கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு கோரிய வழக்கில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும் தவெக தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லையெனவும்
அவர் கூறியுள்ளார்.

பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் சம்பவம் நடந்ததும் தொண்டர்களையும்,
அவர்களை பின்தொடர்பவர்களையும் கைவிட்டு சென்றதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

கரூர் துயரத்தில் அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் இருந்தபோது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மொத்தமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
ஒரு கட்டுப்படுத்தப்படாத கலவரம்போல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அரசு கருணை காட்டுகிறதா என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here