வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி பலி

145
0
Spread the love

ஹொரணை-மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (04.10) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

அதிவேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, மறுபுறம் சென்ற லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here