மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகம்

6
0
Spread the love

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம்  தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக் கிடைத்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த எரிவாயு கையிருப்புகள் மாலைதீவில் உள்ள மிதக்கும் சேமிப்பு முனையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தவிர, மேலதிகமாக 20,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று தென்னாப்பிரிக்கா ஊடாக மாலைதீவை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி இந்த பண்டிகைக் காலத்தில் நுகர்வோரின் தேவைக்கேற்ப போதுமான எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பண்டிகைக் காலத்தின் பின்னரும் சந்தைக்குத் தேவையான எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, ஏப்ரல் 16 முதல் மீண்டும் வழமை போல் எரிவாயு நிரப்பும் மற்றும் விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here