தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சிக்கான அலுவலகம் அமைச்சர் பிமல் ரத்தநாயக்காவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று சனிக்கிழமை (04.10) பிற்பகல் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஞீவன், மருத்துவர் பவந்தராசா உட்பட தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் பருத்தித்துறை நகரசபை,
வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



யாழ்ப்பாண செய்தியாளர்
பூ.லின்ரன்







