பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு பதவி விலகியுள்ளார்.
பிரதமராக தான் தொடர்ந்தும் செயற்படுவதற்கு பல நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் சமரசத்திற்கு தயாராக இல்லையெனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை, சந்தித்த ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் செபாஸ்டியன் லெகோர்னு பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரான்சின் 47 ஆவது பிரதமராக பதவியேற்று 27 நாட்களிலேயே அவர் பதவி விலகலை அறிவித்துள்ளார்.
அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனும் அவரது பதவி விலகலை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







