யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் காணி உறுதியை பதிவு செய்த குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் அவர் இன்றைய தினம் (06.10) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை சட்டவிரோதமான முறையில் பதிவு செய்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாண செய்தியாளர்
பூ.லின்ரன்







