எலிக்காய்ச்சல் தொடர்பில் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

52
0
Spread the love

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவின் கேள்விக்கு இன்று(10.10) பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

காலி, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, கம்பஹா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் எலிக்காய்ச்சல் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான மாத்திரைகள் நாட்டில் போதுமான அளவு கிடைப்பதாகவும், நெல் வயல்கள் போன்ற பகுதிகளில் வேலை செய்பவர்கள் முறையாக மருந்தை எடுத்துக்கொள்ளுமாறும் அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் மாத்திரைகள் தேவைப்படுவதாகவும், மூன்று மாதங்களுக்குத் தேவையான மாத்திரைகள் தற்போது கையிருப்பில் இருப்பதாகவும், ஒன்பது மாதங்களுக்குத் தேவையான மற்றொரு இருப்பு விரைவில் பெறப்படும் என்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here