ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர் இன்று (14.10) நேபாள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை சம்பவத்துக்கு 25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி உடந்தையாக செயல்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும், திட்டத்தைத் திட்டமிட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







