யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நேற்றைய (13.10) தினம் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
யாழ்ப்பாணம் உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் சிறந்த உதைப்பந்தாட்ட நடுவருமான 27 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
இளைஞனின் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று விதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது.
மேலும் விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாண செய்தியாளர்
பூ.லின்ரன்







